Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இன்று சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Sat, 01 Oct 2022 6:54:38 PM

இன்று சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு

சென்னை: ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதேபோல் இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.

rainy,chennai,tiruvallur,kanyakumari,nellai , மழை, சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, நெல்லை

இதையடுத்து இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து அதேபோன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|