Advertisement

தமிழகத்தில் இன்று முதல் 26ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Thu, 22 Sept 2022 1:59:42 PM

தமிழகத்தில் இன்று முதல் 26ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழக பகுதிகளில் மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் இன்று முதல் 26ம் தேதி வரை தமிழகத்தில் மேற்கு தொடர்ச்‌சி மலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதை ஒட்டிய மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்று சென்னை வானிலை மையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

இதை அடுத்து மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, 22.09.2022 மற்றும்‌ 23.09.2022, மேற்கு தொடர்ச்‌சி மலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதை ஒட்டிய மாவட்டங்கள்‌, தமிழக கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌ என தெரிவித்துள்ளது.

rain,chennai ,சென்னை,மழை

மேலும் 24.09.2022 முதல்‌ 26.09.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என அறிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

Tags :
|