சென்னையில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
By: vaithegi Fri, 17 Mar 2023 3:35:05 PM
சென்னை: சென்னையில் வரும் மார்ச் 19 -ஆம் தேதி ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் ...
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் மார்ச் 19 -ஆம் தேதி மிக பிரமாண்டமாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறயிருக்கிறது.
தமிழ் சினிமாவில் பணிபுரியும் அனைத்து லைட்மேன்களுக்கும் நிதி திரட்டும் வகையில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறயிருக்கிறது. “விங்ஸ் ஆஃப் லவ்” என்கிற தலைப்பில் மாலை 7 மணிக்கு நடைபெறும் இப்பிரமாண்டமான நிகழ்ச்சியில் சூஃபி பாடல்கள் பாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த இசை நிகழ்ச்சிக்கான முன்பதிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன. இப்பிரமாண்டமான ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இசை நிகழ்ச்சியை கண்டு களிக்க வரும் பொதுமக்களின் வசதிக்காக மார்ச் 19- ஆம் தேதி மட்டும் நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.