Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை தியாகராயநகர் தெற்கு உஸ்மான் சாலை பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை தியாகராயநகர் தெற்கு உஸ்மான் சாலை பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

By: vaithegi Sat, 28 Jan 2023 12:57:17 PM

சென்னை தியாகராயநகர் தெற்கு உஸ்மான் சாலை பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை : போக்குவரத்து மாற்றம் ..... சென்னை தியாகராயநகர் தெற்கு உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து அண்ணாசாலை சி.ஐ.டி. 1-வது மெயின் ரோடு வரை மேம்பாலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதனால் தெற்கு உஸ்மான் சாலை, அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று முதல் செப்டம்பர் மாதம் 27-ந்தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகின்றது.

இதனை அடுத்து அதன் விவரம் :- தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தில் இருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணாசாலை சி.ஐ.டி. 1-வது மெயின் ரோடு செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, கண்ணமாபேட்டை சந்திப்பு, தெற்கு மேற்கு போக் சாலை, மூப்பராயன் தெரு இணைப்பு சாலை வந்து அண்ணாசாலையை அடையலாம்.

chennai,traffic change ,சென்னை ,போக்குவரத்து மாற்றம்


தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தில் இருந்து வரும் பஸ்கள் தெற்கு உஸ்மான் சாலை வழியாக செல்ல தடை செய்யப்பட்டு, மேட்லி சந்திப்பு, பர்கிட் சாலை, மூப்பராயன் தெரு, இணைப்பு சாலை வந்து அண்ணாசாலையை அடையலாம்.

இதையடுத்து அரங்கநாதன் சுரங்கப்பாதையில் இருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணாசாலை, சி.ஐ.டி. 1-வது மெயின் ரோடு செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, மேற்கு சி.ஐ.டி. நகர் வடக்கு தெரு வழியாக வந்து அண்ணாசாலையை அடையலாம்.

மேலும் அண்ணாசாலை சி.ஐ.டி 1-வது மெயின் ரோடு சந்திப்பில் இருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக தியாகராயநகர் பஸ் நிலையத்துக்கு செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம் என சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :