Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிசம்பர் 7ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்க முதலமைச்சர் உத்தரவு

டிசம்பர் 7ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்க முதலமைச்சர் உத்தரவு

By: Nagaraj Mon, 30 Nov 2020 8:50:55 PM

டிசம்பர் 7ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்க முதலமைச்சர் உத்தரவு

முதல்வர் உத்தரவு... தமிழகத்தில் டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பதற்கு அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது.

chief minister,order,final year,classes,colleges ,முதலமைச்சர், உத்தரவு, இறுதியாண்டு, வகுப்புகள், கல்லூரிகள்

இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து தமிழகத்தில் ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவித்துள்ளார். மேலும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளை ஏழாம் தேதி முதல் திறக்கவும் அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags :
|