Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குழந்தைகள் பாதுகாப்பான வாகனங்களில் செல்ல வேண்டும்... மதுரை கலெக்டர் அறிவுறுத்தல்

குழந்தைகள் பாதுகாப்பான வாகனங்களில் செல்ல வேண்டும்... மதுரை கலெக்டர் அறிவுறுத்தல்

By: Nagaraj Thu, 25 May 2023 7:07:47 PM

குழந்தைகள் பாதுகாப்பான வாகனங்களில் செல்ல வேண்டும்... மதுரை கலெக்டர் அறிவுறுத்தல்

மதுரை: மதுரை கலெக்டர் அதிரடி... உங்கள் குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பான வாகனங்களில் செல்ல வேண்டும் என நினைக்கிறீர்களோ அதேபோன்ற பாதுகாப்பை மற்றவர்களின் குழந்தைகளுக்கும் வழங்கவேண்டும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தினார்.

பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆய்வு செய்தார். வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள், முதலுதவி பெட்டிகள் உள்ளிட்டவை முறையாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.

allowed,not allowed,officials,madurai,school vehicles,collector ,அனுமதி, கூடாது, அதிகாரிகள், மதுரை, பள்ளி வாகனங்கள், கலெக்டர்

ஒரு வாகனத்தில் சிறிய ஓட்டை இருப்பதை பார்த்த ஆட்சியர், சென்னையில் இதுபோன்ற ஓட்டையில் ஒரு குழந்தை விழுந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி உடனடியாக ஓட்டையை சரி செய்ய அறிவுறுத்தினார்.

அதுவரையில் வாகனத்திற்கு அனுமதி வழங்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags :