10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் இன்று முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்
By: vaithegi Fri, 17 Mar 2023 2:58:52 PM
சென்னை: தனித்தேர்வராக எழுத ஆன்-லைனில் விண்ணப்பித்தவர்கள் இன்று பிற்பகல் முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் .... தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் மார்ச் 17-ம் தேதி முதல் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் நேற்று அறிவித்திருந்தது.
இதையடுத்து மார்ச் 20 முதல் மார்ச் 24-ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைப்பெறவுள்ளது. செய்முறை தேர்வு பற்றிய விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கேட்டு தனித்தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் இன்று முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
எனவே அதன்படி தனித்தேர்வராக எழுத ஆன்-லைனில் விண்ணப்பித்தவர்கள் இன்று பிற்பகல் முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்கத்தின் அதிகாரபூர்வ www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்
என்றும் கூறப்பட்டுள்ளது.
தங்களது விண்ணப்ப எண், நிரந்தர பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்