Advertisement

வணிக சிலிண்டர்கள் ரூ.56 வரை விலை உயர்வு

By: Nagaraj Wed, 02 Dec 2020 8:02:21 PM

வணிக சிலிண்டர்கள் ரூ.56 வரை விலை உயர்வு

வணிக சிலிண்டர்களின் விலை ரூ.56 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் மானியம் இல்லாத சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர்களின் விலை மாற்றி அமைக்கப்படும். அதன்படி டிசம்பர் மாதத்திற்கான வணிக சிலிண்டர்களின் விலை ரூபாய் 56 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

cylinder prices,trade,rise,traders ,சிலிண்டர் விலை, வணிகம், உயர்வு, வர்த்தகர்கள்

இதையடுத்து சென்னையில் வணிக சிலிண்டரின் விலை (எல்பிஜி கேஸ்) ரூபாய் ஆயிரத்து 410.50 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் ரூபாய் 55 உயர்த்தப்பட்டுள்ளது.

மானியமில்லா சிலிண்டர் விலை மாற்றம் இன்றி 594ஆக தொடர்கிறது. வணிக சிலிண்டர் விலை உயர்வால் வர்த்தகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Tags :
|
|