Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமளியில் ஈடுபட்டதால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றம்

அமளியில் ஈடுபட்டதால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றம்

By: Monisha Tue, 15 Sept 2020 2:33:06 PM

அமளியில் ஈடுபட்டதால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றம்

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மார்ச் மாதம் முடிவடைந்தது. இதனையடுத்து இந்த ஆண்டிற்கான 2-வது கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நேற்று துவங்கியது. 2-வது கூட்டத்தொடர் 3 நாட்கள் மட்டுமே நடைபெறுகிறது. சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்குமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழக சட்டசபை கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டு மரணம் அடைந்த எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவுக்கு இன்று கூட்டத்தொடரில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வசந்தகுமார் எம்பி உள்ளிட்டோர் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

congress,mlas,assembly,speaker,extension ,காங்கிரஸ்,எம்எல்ஏக்கள்,சட்டசபை,சபாநாயகர்,நீட்தேர்வு

இந்நிலையில் சட்டசபை 2வது நாளாக இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றய கூட்டத்தில் நீட் விவகாரம் தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து, சபாநாயகர் தனபால் உத்தரவின்பேரில் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களை வெளியேற்றினர்.நீட் வழக்கில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி ஆஜராகி வாதாடியதாக அதிமுக எம்எல்ஏ இன்பதுரை கூறினார்.

அதிமுக எம்எல்ஏவின் கருத்தை நீக்கக்கோரி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

Tags :
|