Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்திக்கு கொரோனா ஏற்பட்டிருப்பது கவலை அளிக்கிறது .. மு.க ஸ்டாலின் தெரிவிப்பு

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்திக்கு கொரோனா ஏற்பட்டிருப்பது கவலை அளிக்கிறது .. மு.க ஸ்டாலின் தெரிவிப்பு

By: vaithegi Sat, 13 Aug 2022 9:24:19 PM

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்திக்கு கொரோனா ஏற்பட்டிருப்பது கவலை அளிக்கிறது ..    மு.க ஸ்டாலின் தெரிவிப்பு

சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக சோனியாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தொற்று உறுதியானதை அடுத்து சோனியா காந்தி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். சோனியா காந்தி விரைவில் குணம் அடைய அரசியல் தலைவர்கள்பலர் விருப்பம் தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

m. k. stalin,sonia gandhi ,  மு.க ஸ்டாலின் ,சோனியாகாந்தி

இதை அடுத்து அந்த வகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது மிகவும் கவலை அளிக்கிறது.

எனவே அவர் கூடிய விரைவில், முழுமையாகவும் குணமடைய விழைகிறேன். இதையடுத்து விரைவில் மீண்டும் வழக்கம்போல் தனது அனைத்து பணிகளில் ஈடுபடுவார் என நம்புகிறேன்' என்றும் கூறி உள்ளார்.

Tags :