Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஹாரி... இப்படி பண்ணலாமாப்பா!!!

சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஹாரி... இப்படி பண்ணலாமாப்பா!!!

By: Nagaraj Tue, 20 Sept 2022 9:22:38 PM

சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஹாரி... இப்படி பண்ணலாமாப்பா!!!

பிரிட்டன்: சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஹாரி... ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் பங்கேற்ற இளவரசர் ஹாரி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் பங்கேற்ற இளவரசர் ஹாரி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ராணி எலிசபெத் (96) உடல்நலக் குறைவு காரணமாக ஸ்காட்லாந்தில் உள்ள தனது பால்மோரல் மாளிகையில் கடந்த 8-ஆம் தேதி மறைந்தாா். அங்கிருந்து அவரது உடல் லண்டனில் உள்ள நாடாளுமன்ற வெஸ்ட்மின்ஸ்டா் அரங்குக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நாடு முழுவதிலிருமிருந்து குவிந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பல மணி நேரம் வரை காத்திருந்து மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.

அங்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை வரை தொடா்ந்தது. பின்னா், அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்குக்காக அங்கிருந்து புறப்பட்டது. அரச குடும்பத்தினரின் இறுதிச்சடங்குக்குப் பயன்படுத்தப்படும் பீரங்கி வண்டியில் மகாராணியின் உடல் வைக்கப்பட்ட பெட்டி ஏற்றப்பட்டு ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. கடற்படையைச் சோந்த 142 மாலுமிகள் இந்த பீரங்கி வண்டியை வழிநடத்திச் சென்றனா்.

review,controversy,netizens,video,prince harry ,விமர்சனம், சர்ச்சை, இணையவாசிகள், வீடியோ, இளவரசர் ஹாரி

பீரங்கி வண்டிக்கு பின்னால் அரசா் சாா்லஸ், அவரது மனைவி கமீலா மற்றும் அரச குடும்பத்து வாரிசுகள் நடந்து சென்றனா். வழிநெடுக பொதுமக்கள் லட்சக்கணக்கானோா் நின்று மகாராணிக்கு பிரியாவிடை அளித்தனா்.

மத்திய லண்டனில் உள்ள வெலிங்டன் வளைவு வரை பீரங்கி வண்டியில் கொண்டு செல்லப்பட்ட மகாராணியின் உடல், அங்கிருந்து வாகனத்துக்கு மாற்றப்பட்டு வெஸ்ட்மின்ஸ்டா் அபே தேவாலயத்துக்கு புறப்பட்டது.

இதில் இந்திய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் மற்றும் உலக நாடுகளைச் சோந்த 500 தலைவா்கள் உள்பட 2,000 பேர் பங்கேற்றனா்.

இந்நிலையில், இறுதிச் சடங்கில் அரச குடும்பத்தினர் பிரிட்டன் தேசிய கீதமான 'காட் சேவ் தி கிங் பாடலைப் பாடியபோது இளவரசர் ஹாரி அப்பாடலை பாடாமல் இருந்த வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. தற்போது, இணையவாசிகள் இதனை பகிர்ந்து 'மரியாதை தெரியாதவர் ஹாரி' என விமர்சித்து வருகின்றனர்.

Tags :
|
|