Advertisement

கோவையில் 8 காவலர்கள் உட்பட 104 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Thu, 16 July 2020 12:42:40 PM

கோவையில் 8 காவலர்கள் உட்பட 104 பேருக்கு கொரோனா பாதிப்பு

கோவை மாவட்டத்தில் 8 காவலர்கள் உள்பட 104 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு இரண்டு நாள்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்த 2 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள், 4 ஆண் காவலர்கள் மற்றும் ஒரு பெண் காவலர் சேர்த்து 8 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் போத்தனூர், துடியலூர், சூலூர் காவல் நிலையத்தை தொடர்ந்து மதுக்கரை காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்த காவலர்களுக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பணியாற்றி வரும் 32 வயது பெண், 23 வயது ஆண் பணியாளர்கள் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

kovai,corona,increases,vulnerability ,கோவை, கொரோனா, அதிகரிக்கிறது, பாதிப்பு

கோவை, அவினாசி சாலை பீளமேட்டி இயங்கிவரும் ஓட்டல் பணியாளரான 25 வயது இளைஞருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தவிர உருமாண்டம்பாளையம் பொன்விழா நகரை சேர்ந்த 58, 38, 28, பெண்கள், 15, 11 வயது சிறுமிகள், 38 வயது ஆண், ஹைவே காலனியை சேர்ந்த 52 வயது பெண், 21 வயது இளைஞர், சிவானந்தபுரத்தை சேர்ந்த 48 வயது ஆண், 40 வயது பெண், ஒண்டிப்புதூரை சேர்ந்த 70 வயது முதியவர், 41, 35 வயது ஆண்கள், அருள்கார்டனை சேர்ந்த 47 வயது பெண், 38 வயது ஆண், பீளமேட்டை சேர்ந்த 65 வயது முதியவர், 13 வயது சிறுவன், 16 வயது சிறுமி பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

கரும்புக்கடை பகுதியை சேர்ந்த 30 வயது பெண், 36 வயது ஆண், செல்வபுரம் சாமி அய்யர் வீதியை சேர்ந்த 9 பேர், முத்துசாமி காலனியை சேர்ந்த 13 பேர், சாரமேடு இலாஹி நகரை சேர்ந்த 8 பேர், ஊப்பார வீதியை சேர்ந்த 3 பேர், செட்டிவீதி நகைப்பட்டறை தொழிலாளர்கள் 3 பேர் உள்பட 104 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரே நாளில் கோவையில் 30 பெண்கள், 74 ஆண்கள் என மொத்தம் 104 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,591 ஆக உயர்ந்துள்ளது.

Tags :
|
|