Advertisement

கொரோனா பாதித்து மேலும் 3 பேர் பலியானதாக தகவல்

By: Nagaraj Fri, 27 Nov 2020 7:22:52 PM

கொரோனா பாதித்து மேலும் 3 பேர் பலியானதாக தகவல்

மேலும் மூன்று பேர் கொரோனா வைரசால் பாதித்து மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, கொழும்பைச் சேர்ந்த 87 வயதுடைய ஆண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். இவர், கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் இவரின் மரணத்துக்கான காரணம், பாக்டீரியா தொற்று மற்றும் கொரோனா தொற்றுடன் நீண்டநாள் நுரையீரல் பாதிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பம்பலப்பிட்டியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். இவர், கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு கடந்த 25ஆம் திகதி முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

corona,death,number,information,hospital ,கொரொனா, இறப்பு, எண்ணிக்கை, தகவல், மருத்துவமனை

இவரது மரணத்திற்கான காரணம், அதிக இரத்த அழுத்தம், நிமோனியா மற்றும் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பேலியகொட பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 23ஆம் திகதி கொழும்பு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவரது இறப்புக்கான காரணம் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பக்கவாதம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 99ஆக அதிகரித்துள்ளது.

Tags :
|
|
|