Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தின் மத்திய மண்டலத்தில் கட்டுக்குள் வந்தது கொரோனா தொற்று

தமிழகத்தின் மத்திய மண்டலத்தில் கட்டுக்குள் வந்தது கொரோனா தொற்று

By: Monisha Fri, 11 Dec 2020 12:45:38 PM

தமிழகத்தின் மத்திய மண்டலத்தில் கட்டுக்குள் வந்தது கொரோனா தொற்று

தமிழகத்தில் கட்டுக்குள் வந்துள்ள கொரோனா வைரஸ் தொற்று திருச்சி மத்திய மண்டலத்திலும் எதிரொலிக்கிறது. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா பரவல் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களை அடக்கிய மத்திய மண்டலத்தில் உச்சம் தொட்டது. இந்த மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 800-ஐ தாண்டிய தினசரி பாதிப்பு அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் அதிரடி தடுப்பு நடவடிக்கையால் படிப்படியாக குறைய தொடங்கியது. கடந்த நவம்பர் மாதம் முதல் சராசரியாக 50-ஐ கடந்த தினசரி பாதிப்பு தற்போது 20-க்கும் கீழ் வந்துள்ளது.

நேற்றைய பாதிப்பு அடிப்படையில் அரியலூர்- 6, கரூர்- 10, புதுக்கோட்டை- 6, தஞ்சாவூர்- 15, திருவாரூர்- 11, திருச்சி- 18, நாகை- 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூரில் நேற்றைய பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை. கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் தொற்று யாருக்கும் கண்டறியப்படவில்லை. இதன் மூலம் மத்திய மண்டலத்தில் 82 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

corona,vulnerability,control,hope,joy ,கொரோனா,பாதிப்பு,கட்டுப்பாடு,நம்பிக்கை,மகிழ்ச்சி

முதல் முறையாக திருச்சி மத்திய மண்டலத்தில் கொரோனா நோய் தொற்று 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. இது சுகாதாரத்துறைக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தீபாவளி பண்டிகை கூட்டத்தால் நோய்பரவல் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் இருந்த நிலையில் படிப்படியாக தொற்று குறைந்து வருவது மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மத்திய மண்டலத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 71,850 பேர் ஆளாகியுள்ளனர். அரியலூரில் 4,605, கரூரில் 4,949, பெரம்பலூரில் 2,247, புதுக்கோட்டையில் 11,235 பேர், தஞ்சாவூரில் 16,673, திருவாரூரில் 10,630, திருச்சியில் 13,687, நாகையில் 7,824 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 904 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

கடந்த ஒரு வாரத்தில் நாகையில் மட்டும் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெறுவோர் பெரும்பாலானோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அலோபதி, சித்தா மருத்துவத்தின் கூட்டு முயற்சியால் திருச்சி மத்திய மண்டலம் கொரோனா பாதிப்பிலிருந்து வேகமாக மீண்டு வருவது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|
|