Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 14 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 14 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Sat, 27 June 2020 10:14:03 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 14 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் உள்பட 14 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் பலி எண்ணிக்கை 957 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 527 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை நோய் தொற்றில் இருந்து 325 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 201 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

kallakurichi,coronavirus,police,victim,police station ,கள்ளக்குறிச்சி,கொரோனா வைரஸ்,போலீசார்,பாதிப்பு,காவல் நிலையம்

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் முன் வரிசையில் நின்று பணியாற்றும் காவல்துறையினரும் கொரோனவால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் உள்பட 14 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தொற்று உறுதியான போலீசார் பணிபுரிந்த திருக்கோவிலூர், திருப்பாலப்பந்தல், கள்ளக்குறிச்சி காவல் நிலையங்கள் மூடப்பட்டு கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

Tags :
|
|