Advertisement

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்

By: vaithegi Thu, 22 Sept 2022 09:33:27 AM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்

இந்தியா : உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாகவே குறைந்து கொண்டே வருகிறது.இதனை அடுத்து இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,443 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

எனவே அதன் படி நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,342 ஆக பதிவாகியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,291 பேர் குணமடைந்துள்ளனர்.

corona,india ,கொரோனா ,இந்தியா

இதையடுத்து இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,429 பேர் ஆக உள்ளது. நேற்று ஒரேநாளில் 26 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.இதுவரை மட்டும் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,39,78,271 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் நாடு முழுவதும் இதுவரை மட்டும் 2,17,11,36,934 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 15,85,343 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

Tags :
|