Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இங்கிலாந்திலிருந்து திருச்சி வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை

இங்கிலாந்திலிருந்து திருச்சி வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை

By: Monisha Sat, 26 Dec 2020 3:39:24 PM

இங்கிலாந்திலிருந்து திருச்சி வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை

இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இது முந்தைய வைரசின் தாக்கத்தை விட வீரியம் மிக்கது என மருத்துவ வல்லுனர்கள் கணித்துள்ளனர். இதனால் இங்கிலாந்து நாட்டுக்கான விமான சேவையை பல நாடுகள் துண்டித்துள்ளன.

இந்த புதிய வைரஸ் மீண்டும் உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து இங்கிலாந்து நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். அந்த அடிப்படையில் இங்கிலாந்து நாட்டிலிருந்து பல்வேறு நாடுகளின் வழியாக திருச்சி மாவட்டம் திரும்பிய 89 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

corona,test,malignancy,flight,isolation ,கொரோனா,பரிசோதனை,வீரியம்,விமானம்,தனிமை

இவர்கள் அனைவருக்கும் கடந்த மூன்று தினங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்களில் யாருக்கும் தொற்று உறுதி ஆகவில்லை என்றும் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் இன்று தெரிவித்தார்.

மேலும் பரிசோதனைக்கு உட்படுத்தியவர்களை வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பரிசோதனை செய்தவர்கள் வீடுகளில் தனிமையில் இருப்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Tags :
|
|
|