Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..அச்சத்தில் நாட்டு மக்கள்..

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..அச்சத்தில் நாட்டு மக்கள்..

By: Monisha Tue, 12 July 2022 7:14:35 PM

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..அச்சத்தில் நாட்டு மக்கள்..

சீனா: நாடு முழுவதும் பெரும்பாலான முக்கிய நகரங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு விடுமா என்ற அச்சம் சீன மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

சீனாவி்ல் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா, மெல்ல மெல்ல உலக நாடுகள் முழுவதும் பரவி பொதுமக்களை உண்டு, இல்லை என்று செய்துவிட்டது.பொதுமுடக்கம், தடுப்பூசி என்று பல்வேறு தொடர் முயற்சிகளால் இரண்டாண்டுக்கு மேலான போராட்டத்துக்கு பிறகு உலக அளவில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.

corona,china,fear,increased ,சீனா,நாடு,தடுப்பூசி,கொரோனா,

சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உருமாறிய பிஏ.5 வகை தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. அங்கு கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 400 ஐ தாண்டி பதிவாகி வரும் நிலையில், தெற்கு கடலோர பகுதியில் அமைந்துள்ள மக்காவ் பிராந்தியத்திலும் பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வருகிறது.

பெய்ஜிங் நகரிலும் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் பொதுமுடக்கம் அமலாக்கப்படலாம் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags :
|
|
|