Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற 11-ம் தேதி தொடங்கிறது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற 11-ம் தேதி தொடங்கிறது

By: vaithegi Tue, 04 Oct 2022 1:37:46 PM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற 11-ம் தேதி தொடங்கிறது

சென்னை: கலந்தாய்வு வருகிற 11-ம் தேதி தொடங்கிறது ... நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வு வருகிற 11-ம் தேதி தொடங்கும் என்று மருத்துவ கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் எய்ம்ஸ், ஜிம்பர் உள்ளிட்ட மருத்துவ கல்லூரிகளில் அக்டோபர் 11ம் தேதி தொடங்கும் முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வு இருபதாம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

consultancy,mbbs,bds ,கலந்தாய்வு ,எம்பிபிஎஸ், பிடிஎஸ்

இதையடுத்து அக்டோபர் 17ஆம் தேதி முதல் 28ஆம் தேதிக்குள் மாநிலங்களில் முதல் கட்ட மருத்துவ கலந்தாய்வை நடத்திக் கொள்ளலாம் என்றும் மருத்துவ கலந்தாய்வு மூலம் கல்லூரிகளை தேர்வு செய்பவர்கள் அக்டோபர் 28ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதேப்போன்று அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நவம்பர் இரண்டாம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும். மாநிலங்களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நவம்பர் 7ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும் என கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் நவம்பர் 18ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர்க்கை பெற்று விட வேண்டும் என மாநிலங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் நவம்பர் 21ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|