சென்னையில் தீபாவளி பண்டிகைக்காக கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
By: Nagaraj Sun, 23 Oct 2022 9:34:16 PM
சென்னை: தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த வாரம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூடியதை போன்று இந்த வாரமும் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டு பட்டாசுகள் மற்றும் புத்தாடைகளை உற்சாகத்துடன் வாங்கி சென்றனர்.
இன்று தீபாவளிக்கு முந்தைய கடைசி நாள் என்பதால் தி.நகர், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் காலையிலேயே சென்று தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்கியது முடிந்தது. இதனால் கடை வீதிகளில் கூட்டம் களைகட்டி காணப்பட்டது. நேரம் செல்ல செல்ல… இந்த கூட்டம் அதிகமானது.
பிற்காலத்தில் கடைவீதிகள் அணியிலும் திருவிழா கூட்டம்போல காணப்பட்டது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தி.நகர் ரங்கநாதன் தெருவில் பொதுமக்கள் அதிகளவில் காணப்பட்டனர்.
அப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடைகள், சுவீட் ஸ்டால்கள், பட்டாசு கடைகள்
போன்றவற்றிலும் மக்கள் திரண்டு இனிப்பு வகைகளையும், பட்டாசுகளையும்,
புத்தாடைகளையும் வாங்கி மகிழ்ந்தனர்.பாண்டிபஜார் பகுதியில் உள்ள சாலையோர
கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த கடைகளில் பெண்கள்,
குழந்தைகள் ஆகியோர் அதிகமாக காணப்பட்டனர்.
இவர்கள்
தங்களுக்கு தேவையான அலங்கார பொருட்கள் மற்றும் விளையாட்டு பொருட்களை
வாங்கினர். புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள ஜவுளி கடைகளிலும் தீபாவளி
கூட்டம் அலைமோதியது. அங்குள்ள டாணா தெருவில் பூக்களின் விற்பனையும்
அதிகரித்துள்ளது.