Advertisement

மஹாராஷ்டிரா அமைச்சர் அசோக் சவான் கொரோனாவால் பாதிப்பு

By: Nagaraj Wed, 27 May 2020 11:54:58 AM

மஹாராஷ்டிரா அமைச்சர் அசோக் சவான் கொரோனாவால் பாதிப்பு

மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், தற்போதைய அமைச்சரான அசோக் சவானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

மஹாராஷ்டிராவில் சிவசேனா, காங்., தேசியவாத காங்., , கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக உத்தவ் உள்ளார். இவரது அமைச்சரவையில் காங். கட்சியைச் சேர்ந்த அசோக் சவானுக்கு கடந்த ஞாயின்று மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது.

minister,ashok chavan,corona,therapy,loneliness ,அமைச்சர், அசோக் சவான், கொரோனா, சிகிச்சை, தனிமை


இதையடுத்து தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக ஜிதேந்திரா அவகாத் என்ற அமைச்சர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சமீபத்தில் குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில் மற்றொரு அமைச்சரான அசோக் சவானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இரு அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags :
|