Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீப திருவிழா .. தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

தீப திருவிழா .. தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

By: vaithegi Fri, 02 Dec 2022 7:39:16 PM

தீப திருவிழா  ..  தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருவண்ணாமலை : சிறப்பு ரயில்கள் இயக்கம் ... தமிழகத்தில் திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத தீப திருவிழா வரும் 6ம் தேதி விமர்சையாக நடைபெற உள்ளது. இத்திருவிழாவை காண நடப்பு ஆண்டு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தர உள்ளார்.

இதையடுத்து கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 வருடம் கொரோனா தாக்கத்தால் தீப திருவிழாவிற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. நடப்பு ஆண்டு இயல்பு நிலை திரும்பியுள்ளதால் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

special trains,festival of lights ,சிறப்பு ரயில்கள் ,தீப திருவிழா

எனவே இதனை முன்னிட்டு தமிழக போக்குவரத்து கழகம் சார்பாக 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் தற்காலிக பேருந்து நிறுத்தங்களும் அமைக்கப்பட்டுள்ளது.அதை தொடர்ந்து தற்போது தென்னக ரயில்வே சார்பில் டிசம்பர் 5ஆம் தேதி முதல் 8ம் தேதி வரை திருவண்ணாமலைக்கு 24 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

இதனை அடுத்து வரும் 6,7ம் தேதிகளில் மயிலாடுதுறை திருவண்ணாமலை வரை 4 சிறப்பு ரயில்களும், டிச.6,7ம் தேதிகளில் திருச்சி, வேலூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள் என்று மொத்தம் 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை தரப்பில் தெரிவித்துள்ளது.

Tags :