Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பத்ம விருதுகள் பெறத் தகுதியானவர்களா? நாமக்கல் மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..

பத்ம விருதுகள் பெறத் தகுதியானவர்களா? நாமக்கல் மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..

By: Monisha Sat, 16 July 2022 6:18:46 PM

பத்ம விருதுகள் பெறத் தகுதியானவர்களா? நாமக்கல் மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட மக்களே நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் பெற கலை, இலக்கியம், இசை, ஓவியம், சிற்பம், சினிமா, கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொதுப்பணிகள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்தவர்கள் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் பத்ம விருதுகளை பெற வேண்டும் என்றால் கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில் நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் சிறப்பாக பணியாற்றி இருக்க வேண்டும். இதற்காக வருகிற 2023-ம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகள் வழங்க தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.


எந்தவித பாகுபாடு இல்லாமல் சாதனை புரிந்தவர்களை கௌரவிக்கும் வகையில் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளது. தற்போது நாமக்கல் மாவட்ட மக்கள் இந்த விருதைப் பெற விண்ணப்பிக்கலாம்.

deserve,padma awards,admin,announcement ,பத்ம விருது,நிர்வாகம்,சாதனை,
பொதுப்பணி,

மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள ( www.padmaawards.gov.in)என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வருகின்ற செப்டம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலருக்கு தகுதியுள்ளவர்கள் அனுப்பி வைக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைகளுடன் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|