Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் தினமும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; அச்சத்தில் மக்கள்

தமிழகத்தில் தினமும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; அச்சத்தில் மக்கள்

By: Nagaraj Tue, 12 May 2020 11:25:04 AM

தமிழகத்தில் தினமும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; அச்சத்தில் மக்கள்

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரமாக மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வந்த போதிலும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

corona,list,healthcare,people fear,increase ,கொரோனா, பட்டியல், சுகாதாரத்துறை, மக்கள் அச்சம், அதிகரிப்பு

கொரோனா பரவலைத் தடுக்க 48வது நாளாக நாடு முழுவதும் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் தமிழகத்தைப் பொறுத்தவரை சமூகப்பரவலான மூன்றாம் நிலையை எட்டியிருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 8002 பேர். நேற்று ஒரே நாளில் மட்டும் 798 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே போல் நேற்று மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 பேர். இதனால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 பேராக உயர்ந்துள்ளது.

corona,list,healthcare,people fear,increase ,கொரோனா, பட்டியல், சுகாதாரத்துறை, மக்கள் அச்சம், அதிகரிப்பு

இதுவரை சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 4371பேர். நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 90 பேருக்கும், அரியலூர் 33, திருவள்ளூர் 97, திருவண்ணாமலை 10, காஞ்சிபுரம் 8, தூத்துக்குடி3, தஞ்சாவூர் 3, இராமநாதபுரம் 4, மதுரை 4, தருமபுரி 2, திண்டுக்கல், கன்னியாகுமரி, பெரம்பலூர், ராணிப்பேட்டை, விருதுநகர், வேலூரில் தலா 1 என மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இப்படி தினமும் கொரானா பாதிப்பு அதிகரிப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags :
|
|