Advertisement

ஞாயிறு அன்று திருத்தணியில் குவிந்த பக்தர்கள்

By: Nagaraj Mon, 08 May 2023 10:37:22 PM

ஞாயிறு அன்று திருத்தணியில் குவிந்த பக்தர்கள்

திருவள்ளூர்: நேற்று விடுமுறை தினத்தை ஒட்டி திருத்தணி கோயிலுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது.

திருத்தணி கோயிலுக்கு கோவிலுக்கு வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

devotees,holiday,murugan,temple,tiruthani, ,கோவில், திருத்தணி, பக்தர்கள், முருகன், விடுமுறை தினம்

இதனால் திருத்தணி முருகன் கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால், முருகப்பெருமானை தரிசிக்க, பொதுமக்கள் சாலையில் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அதேபோல் தரிசன கட்டணமாக ரூ.100 பெற்ற பக்தர்கள் 1 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். முன்னதாக அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்கவேல், தங்கக்கீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
|