Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஸ்டேட் வங்கி புதிய இயக்குனராக தினேஷ்குமார் பொறுப்பேற்பு

ஸ்டேட் வங்கி புதிய இயக்குனராக தினேஷ்குமார் பொறுப்பேற்பு

By: Nagaraj Thu, 08 Oct 2020 09:15:28 AM

ஸ்டேட் வங்கி புதிய இயக்குனராக தினேஷ்குமார் பொறுப்பேற்பு

புதிய இயக்குனர் பொறுப்பேற்பு... பாரத ஸ்டேட் வங்கியின் புதிய இயக்குநராக தினேஷ் குமார் காரா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 1984-ம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியில் பணியில் சேர்ந்த இவர், வங்கித் துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக, ரீடெய்ல், கார்ப்பரேட் கிரெடிட் மற்றும் சர்வதேச வங்கியில் அனுபவம் பெற்றுள்ளார். பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் 5 துணை வங்கிகளின் இணைப்பில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

state bank,press,director,responsibility ,ஸ்டேட் வங்கி, செய்திக்குறிப்பு, இயக்குனர், பொறுப்பேற்பு

மேலும், எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும் பதவி வகித்துள்ளார். அப்போது, அந்நிறுவனத்தை நாட்டில் உள்ள 5-வது மிகப் பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாக தரம் உயர்த்தினார்.

பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|