Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திமுக பைல்ஸ் பார்ட்-2 வெளியிடப்படும்... அண்ணாமலை அறிவிப்பு

திமுக பைல்ஸ் பார்ட்-2 வெளியிடப்படும்... அண்ணாமலை அறிவிப்பு

By: Nagaraj Sat, 27 May 2023 7:03:08 PM

திமுக பைல்ஸ் பார்ட்-2 வெளியிடப்படும்... அண்ணாமலை அறிவிப்பு

கோவை: திமுக பைல்ஸ் பார்ட்-2 வெளியிடப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 28-ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நம்முடைய செங்கோல் அங்கே செல்ல இருக்கிறது.

part-2,coimbatore,dmk,annamalai,will be published ,பார்ட்-2 , கோவை, திமுக, அண்ணாமலை, வெளியிடப்படும்

தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை எதிர்பார்த்த ஒன்றுதான். கரூரில் சோதனைக்கு சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முழு பொறுப்பையும் திமுக தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். திமுக பைல்ஸ் பார்ட்-2 வெளியிடப்படும்

என் மண் என் மக்கள் என்ற பயணம் ஜூலை ஒன்பதாம் தேதி துவங்க உள்ளது. அந்த பயணத்திலும் ஊழலை பற்றி மட்டும்தான் பேச இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்

Tags :
|
|