Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிக்கனை மட்டும் வெளுத்தெடுக்கும் நாய்; காப்பகத்தில் சேர்த்த அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி

சிக்கனை மட்டும் வெளுத்தெடுக்கும் நாய்; காப்பகத்தில் சேர்த்த அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி

By: Nagaraj Thu, 04 June 2020 10:55:44 AM

சிக்கனை மட்டும் வெளுத்தெடுக்கும் நாய்; காப்பகத்தில் சேர்த்த அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி

ஆதரவற்று இருக்கிறதே என்று தெருவில் நின்ற நாயை காப்பகத்தில் சேர்த்தால் அங்கு சிக்கனை தவிர வேறு எதையும் சாப்பிடாமல் எங்களுக்கு செலவு வைக்கிறது என்று அதிகாரிகள் புலம்புகின்றனர்.

பஞ்சாப்பில் ஆதரவற்ற நாய் ஒன்றை காப்பகத்திற்கு கொண்டு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் அதற்கு உணவு அளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலத்தில் சாலையில் தனித்து விடப்பட்ட நாய் ஒன்றை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்தனர். மிகவும் ஆக்ரோஷமானதாக இருக்கு அந்த நாயை காப்பகத்தில் விட்டுவிட்டு அதன் உரிமையாளரை தேட தொடங்கியுள்ளனர்.

chicken,dog,authorities,high cost,archive ,சிக்கன், நாய், அதிகாரிகள், அதிக செலவு, காப்பகம்

காப்பகத்தில் உள்ள மற்ற நாய்கள் சாப்பிடும் உணவை இது சாப்பிடுவதில்லை. சிக்கன் மட்டுமே தினமும் உணவாக கொள்கிறது.

இந்நிலையில் நாயின் உரிமையாளரை எப்படியோ கண்டுபிடித்துள்ளனர் மாநகராட்சி அதிகாரிகள். ஆனால் அவர் ஊரடங்கின் காரணமாக வெளி மாநிலத்தில் சிக்கி கொண்டதாகவும், வந்ததும் நாயை அழைத்து செல்வதாக கூறியுள்ளார். அதை நம்பி அவர்களும் நாய்க்கு சிக்கனாக வாங்கி போட்டு கொண்டிருக்க அந்த நாய்க்கு மட்டுமே 6000 ரூபாய் செலவாகியுள்ளது.

chicken,dog,authorities,high cost,archive ,சிக்கன், நாய், அதிகாரிகள், அதிக செலவு, காப்பகம்

இந்நிலையில் மீண்டும் அந்த நாயின் உரிமையாளரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவரை தொடர்புகொள்ள இயலவில்லை.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் காவல் நிலையத்தில் அளித்த தகவலையடுத்து நாயின் உரிமையாளர் குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படி அவர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனராம். மேலும் தகவல் வராத பட்சத்தில் நாயை சிக்கன் உணவு பழக்கத்திலிருந்து மாற்ற வேண்டும் என யோசித்து வருகிறார்களாம்.

Tags :
|