Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்... ஜனாதிபதி ஜோபிடன் வலியுறுத்தல்

உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்... ஜனாதிபதி ஜோபிடன் வலியுறுத்தல்

By: Nagaraj Thu, 20 Oct 2022 10:21:30 PM

உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்... ஜனாதிபதி ஜோபிடன் வலியுறுத்தல்

வாஷிங்டன்: ஜோபிடன் வலியுறுத்தல்... அமெரிக்க நிறுவனங்கள் உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ஜோ பிடன் வலியுறுத்தினார்.

கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் (ஒபெக்) அமைப்பில் உள்ள நாடுகள் பெட்ரோலியம் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 2 மில்லியன் பீப்பாய்கள் அளவு குறைக்கப்போவதாக சமீபத்தில் அறிவித்தன. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்திருப்பதால், சர்வதேச அளவில் பெட்ரோல்-டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

production,increase,domestic,oil,emphasis ,உற்பத்தி, அதிகரிப்பு, உள்நாட்டு, எண்ணெய், வலியுறுத்தல்

இது குறித்து அமெரிக்கா அதிருப்தியை வெளிப்படுத்தியது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், எரிசக்தி துறைக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அடுத்த மாதம் முதல் நாட்டின் எண்ணெய் சேமிப்புக் கிடங்கில் இருந்து 10 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் கூடுதலாக வெளியேற்றும்படி அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது 15 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் கூடுதலாக வெளியேற்றும்படி அறிவுறுத்தியுள்ளார்.

இதன்மூலம், எரிபொருள் விலையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும் என்று தெரிவித்தார். டிசம்பர் முதல் இந்த எரிபொருள் பயன்பாட்டுக்கு வரும். அமெரிக்க நிறுவனங்கள் உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Tags :
|