Advertisement

திருச்சியில் நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் விடிய விடிய மழை

By: vaithegi Tue, 27 Sept 2022 08:42:46 AM

திருச்சியில் நள்ளிரவு 12.30 மணிக்கு மேல்  விடிய விடிய மழை

திருச்சி : திருச்சியில் கடந்த ஒரு வாரமாகவே பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. இதனை அடுத்து இந்நிலையில் நேற்று முன்தினம் பகலில் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் திடீரென கருமேக கூட்டங்கள் வானில் திரண்டு ஆங்காங்கே சாரல் மழை பெய்தது.

அதன் பின்னர் நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் தொடங்கிய மழை விடிய விடிய பெய்ததோடு காலை 7 மணி வரை நீடித்தது. நள்ளிரவில் திடீரென இடி, மின்னலுடன் 5 மணி நேரத்துக்கும் மேல் கொட்டித்தீர்த்த இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளம் போல் ஓடியது.

trichy,rain ,மழை ,திருச்சி

இதையடுத்து மாவட்டத்திலேயே அதிகபட்சமாக திருச்சி டவுனில் 16.90 சென்டிமீட்டரும், திருச்சி ஜங்ஷன் மற்றும் பொன்மலையில் 11.40 சென்டிமீட்டரும், துவாக்குடியில் 10 சென்டிமீட்டரும் மழை அளவு பதிவானது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 130.7 சென்டிமீட்டர் மழை பதிவானது.

இதனைத்தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மைய கணக்கெடுப்பின்படி, திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 7.68 செ.மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் 11.4 செ.மீட்டர் மழை பெய்தது. இந்தநிலையில் கடந்த ஒரு மாதம் பெய்த மழை அளவை விட நேற்று முன்தினம் ஒரே நாள் இரவில் சுமார் 11 மடங்கு அதாவது 130.7 செ.மீட்டர் மழை பதிவானது.

Tags :
|