Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிபர் ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவர் சுட்டுக் கொலை

அதிபர் ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவர் சுட்டுக் கொலை

By: Nagaraj Thu, 10 Aug 2023 7:48:45 PM

அதிபர் ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவர் சுட்டுக் கொலை

வாஷிங்டன்: எப்பிஐ அதிகாரிகள் அதிரடி... அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவர் எஃப்.பி.ஐ. அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

யூட்டா மாநிலத்தைச் சேர்ந்த கிரெய்க் ராபர்ட்சன் தீவிர டிரம்ப் ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது. அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பை குற்றவாளி என அறிவித்த நீதிபதி ஆல்வின் பிராக் போன்றோருக்கு பல முறை சமூக வலைத்தளங்களில் கொலை மிரட்டல் விடுத்து வந்தார் ராபர்ட்சன்.

arrests,api officers,shootings,threats,president joe biden ,கைது, எப்பிஐ அதிகாரிகள், சுட்டுக் கொலை, மிரட்டல், அதிபர் ஜோ பைடன்

ஜோ பைடன் யூட்டா மாநிலம் செல்ல உள்ள நிலையில், அவரை கொலை செய்ய ஸ்னைப்பர் ரைபிளை தூசு தட்டி வைத்துள்ளதாக ராபர்ட்சன் பதிவிட்டிருந்தார்.

அவரை கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட மோதலில் எஃப்.பி.ஐ. அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Tags :