Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் மின் உபயோகம் 9 சதவீதம் அதிகரிப்பு

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் மின் உபயோகம் 9 சதவீதம் அதிகரிப்பு

By: Monisha Thu, 10 Dec 2020 3:08:07 PM

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் மின் உபயோகம் 9 சதவீதம் அதிகரிப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் மின்சார தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் உள்ளன. மத்திய மின்சார ஆணையத்தின் கணக்கெடுப்பின்படி, கடந்த ஆண்டு இதேகால கட்டத்தில் அகில இந்திய அளவில் மின்தேவை 98 ஆயிரத்து 363 மில்லியன் யூனிட்களாக இருந்தது. இந்த ஆண்டு 1 லட்சத்து 9 ஆயிரத்து 630 மில்லியன் யூனிட்களாக அதிகரித்து இருக்கிறது. இது 11.5 சதவீதம் அதிகமாகும்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அதிகபட்ச தேவை 14 ஆயிரத்து 335 மெகாவாட்டாக இருந்தது. இந்த ஆண்டு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொழிற்சாலைகள், கடைகள், பள்ளிகள், திருமண மண்டபங்களை திறக்க தடைவிதிக்கப்பட்டது. தற்போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

electricity,curfew,control,factory,electricity consumption ,மின்சாரம்,ஊரடங்கு,கட்டுப்பாடு,தொழிற்சாலை,மின் உபயோகம்

கொரோனா கட்டுப்பாடு முழுமையாக இருந்தபோது தமிழ்நாட்டின் மின்தேவை ஏப்ரல் மாதத்தில் 25.6 சதவீதமும், மே மாதத்தில் 14.5 சதவீதமும் குறைந்தது. செப்டம்பர் வரை மின் தேவை குறைவாகவே இருந்தது. செப்டம்பர் வரை மத்திய அரசு நான்கு தளர்வுகளை அறிவித்தது. இதன்பிறகு தொழிற்சாலைகள் முழுமையாக செயல்பட தொடங்கின. வணிக வளாகங்கள் போன்றவை திறக்கப்பட்டன. இதனால் மின்தேவை அதிகரித்தது.

உணவகங்கள் கடைகள் திறக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டது. இதனால் மின்சார தேவை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழகத்தின் மின்சார தேவை 8 ஆயிரத்து 266 மில்லியன் யூனிட்டாக இருந்தது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் மின்சார தேவை 9 ஆயிரத்து 86 மில்லியன் யூனிட்டாக அதிகரித்துள்ளது. இது ஒன்பது சதவீதம் அதிகமாகும். கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு முதல் முறையாக தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் மின்தேவை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|