Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பூர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 4) மின் விநியோகம் தடை

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 4) மின் விநியோகம் தடை

By: vaithegi Wed, 03 Aug 2022 6:53:14 PM

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 4) மின் விநியோகம் தடை

திருப்பூர் : நாட்டில் மின்சார தேவை அதிகரிப்பு என்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசும், மாநில அரசும் மின் உற்பத்தியை பெருக்குவது குறித்த பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசித்து கொண்டு வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் உணவு இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் மின்சாரம் இல்லாமல் ஒரு நொடி கூட இருக்க முடியாத நிலை உள்ளது.

ஏனென்றால் அனைத்து வேலைகளுக்கும் மின் தேவை என்பது மிக அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. இதனால் மின் உற்பத்தியை எவ்வாறு அதிகரிப்பது என அனைத்து நாடுகளும் முயற்சித்து கொண்டு வருகின்றன.மேலும் மின்சாரத்தை உற்பத்தி செய்வதை விட அதை சரியான வழியில் மக்களுக்கு கொண்டு செல்வது தான் கடினமான ஒன்றாகும்.

power supply interruption,tirupur ,மின் விநியோகம் தடை,திருப்பூர்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மாநிலங்கள் மற்றும் மாவட்ட வாரியாக அந்தந்த துணை மின் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது பணியில் ஈடுபடும் மின் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு மின்தடை செய்யப்படுகிறது. மேலும் மின்கம்பங்கள் சேதம், மின் வயர்களுக்கு இடையூறாக இருக்கும் மரங்கள் அகற்றும் பணிகல் போன்றவை மேற்கொள்ளப்படும்.

அதன்படி திருப்பூர் மாவட்டம் பல்லடம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை( ஆகஸ்ட் 4) வியாழக்கிழமை மங்களம், பூமலூர், மலைக்கோவில், பள்ளிபாளையம், அக்ரஹாரபுதூர், இடுவாய், பாரதிபுரம், சீராணம்பாளையம், கிடாதுரைப்புதூர், வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின் செயற்பொறியாளர் கே.ஆர்.ஆர். சபரி ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :