அரசு பள்ளிகளில் விஜயதசமி அன்று மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தலாம்
By: Monisha Fri, 23 Oct 2020 08:47:15 AM
அரசு பள்ளிகளில் விஜயதசமி அன்று மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தலாம் என்று தொடக்கக் கல்வி துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் விஜயதசமி தினத்தன்று பெற்றோர் தங்கள் குழந்தைகளை முதன்முதலாக பள்ளியில் சேர்ப்பது நடைமுறையில் இருந்து வருகின்ற வழக்கம் ஆகும். எனவே அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் வரும் 26-ம் தேதி (விஜயதசமி) மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தலாம்.
அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு பெற்றோர் அறியும் வகையில் ஊர் பொது இடங்களில் பதாகைகள் வைத்தும், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கூட்டங்கள் நடத்தியும், பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி அரசு பள்ளிகளில் விஜயதசமி தினத்தன்று 5 வயதுடைய குழந்தைகளை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதுடன் அன்றைய தினமே குழந்தைகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளது.