Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீலகிரிக்கு வர இ-பாஸ் அவசியம்...மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் வேண்டாம்

நீலகிரிக்கு வர இ-பாஸ் அவசியம்...மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் வேண்டாம்

By: Monisha Mon, 31 Aug 2020 09:11:25 AM

நீலகிரிக்கு வர இ-பாஸ் அவசியம்...மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் வேண்டாம்

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் 7-வது கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. மாநிலம் முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் 30-9-2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் முதல் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து மலை வாசஸ்தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்லுவதை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் அனுமதியுடன் இ-பாஸ் பெற்று செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கவும், சுற்றுலா பயணிகள் வருவதை கட்டுப்படுத்தவும் நீலகிரிக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நீலகிரியில் இருந்து தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவை இல்லை. ஆனால், மற்ற மாவட்டங்களில் இருந்து நீலகிரி வருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும்.

nilgiris,e pass,curfew,tourist,checkpoint ,நீலகிரி,இ பாஸ்,ஊரடங்கு,சுற்றுலா பயணிகள்,சோதனைச்சாவடி

நீலகிரி வரும் பொதுமக்களை, மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறையினர் இ-பாஸ் பெற்று வருகிறார்களா என்று தீவிரமாக கண்காணித்த பின்னரே உள்ளே அனுமதிப்பார்கள். ஒருவேளை இ-பாஸ் பெறாமல் வந்தால் கண்டிப்பாக திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், "நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்க கலெக்டர் அனுமதியுடன் அவசிய காரணங்களுக்கு மட்டும் இ-பாஸ் வழங்க அரசு அனுமதித்து உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்துக்கு வருவதற்கு இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும். மேலும் நீலகிரியில் தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள் திறப்பது குறித்து கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும்" என்றார்.

Tags :
|
|