Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருநெல்வேலியில் அறிவியல் மையத்தில் கண்காட்சி... இன்னும் 2 நாட்களில் நிறைவு

திருநெல்வேலியில் அறிவியல் மையத்தில் கண்காட்சி... இன்னும் 2 நாட்களில் நிறைவு

By: Nagaraj Sat, 20 May 2023 10:35:36 PM

திருநெல்வேலியில் அறிவியல் மையத்தில் கண்காட்சி... இன்னும் 2 நாட்களில் நிறைவு

திருநெல்வேலி: சர்வதேச அருங்காட்சியக தினமான 2023 அன்று திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் ‘எனது பழங்கால கலைப்பொருட்கள் சேகரிப்பு’ என்ற தலைப்பில் கண்காட்சியின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் மதுரை தொல்லியல் துறை அலுவலர் ஆசைத்தம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானியும் பேராசிரியருமான டாக்டர் வைத்தி ஆறுமுகசாமி தலைமை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பழங்கால பொருட்களை பார்வையிட்டனர். பழங்கால பொருட்கள் குறித்து உரிமையாளர்கள் அவர்களிடம் விளக்கினர்.

admission,center,free,science , அனுமதி, அறிவியல், இலவசம், நெல்லை, மையம்

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் சர்வதேச அருங்காட்சியக தினம் கொண்டாடப்பட்டது. நேற்றும் (19.05.2023) மற்றும் இன்றும் (20.05.2023) ஆகிய 2 நாட்களுக்கு அறிவியல் மையத்தை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என மாவட்ட அறிவியல் மைய நிர்வாகம் தெரிவித்திருந்தது.

Tags :
|
|