Advertisement

விவசாயிகள் தற்கொலைக்கு அரசின் திறமையின்மையே காரணம்

By: Nagaraj Fri, 12 May 2023 7:37:40 PM

விவசாயிகள் தற்கொலைக்கு அரசின் திறமையின்மையே காரணம்

ஆந்திரா: முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு... ஆந்திர அரசின் திறமையின்மையால், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக, முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சித்தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

பருவம் தவறி பெய்த மழையால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவாக மேற்கு கோதாவரி மாவட்டத்தில் சந்திரபாபு நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

chandrababu naidu,hiking,farmers,support,accusation ,சந்திரபாபு நாயுடு, நடைபயணம், விவசாயிகள், ஆதரவு, குற்றச்சாட்டு

இரகவரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து பேசிய அவர், ஆந்திர அரசு விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவில்லை எனக் கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக சந்திரபாபு நடைபயணம் மேற்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|