Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நடிகை சித்ராவின் மரணம் குறித்து தடயவியல் நிபுணரின் தகவல்

நடிகை சித்ராவின் மரணம் குறித்து தடயவியல் நிபுணரின் தகவல்

By: Nagaraj Thu, 10 Dec 2020 9:28:19 PM

நடிகை சித்ராவின் மரணம் குறித்து தடயவியல் நிபுணரின் தகவல்

தடயவியல் நிபுணரின் தகவல்... டிவி சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில் பெங்களூருவை சேர்ந்த தடவியல் நிபுணர் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்ற ஹூட்டிங்கை முடித்து கொண்டு தான் தங்கியிருந்த தனியார் ஹோட்டல் அறைக்கு திரும்பிய சித்ரா, நேற்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டார்.

குளிக்க செல்வதாக கூறிவிட்டு போன, சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது கணவர் ஹேமந்த் குமார் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதிலிருந்து தான் சந்தேகம் எழத் தொடங்கியது. குளிக்கும் போது கணவரை அறையை விட்டு வெளியேற சொல்லியது ஏன்..? உடை மாற்றுவதாக இருந்தாலும் பாத்ரூமில் உடை மாற்றியிருக்கலாமே என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

actress chitra,injuries,forensics,opinion,study ,நடிகை சித்ரா, காயங்கள், தடயவியல், கருத்து, ஆய்வு

அதுமட்டுமின்றி, திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னர் ஏன் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் சித்ராவின் குடும்பத்தினருக்கும் ஹேமந்திற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சித்ராவின் கன்னத்தில் ரத்தக்காயம் இருந்ததால் இது கொலையாக இருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எப்போதும் அனைவருடனும் சிரித்த முகத்துடன் பழகும் சித்ரா, தற்கொலை செய்யக்கூடிய பெண்ணே இல்லை என்று அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சித்ராவின் கன்னத்தில் உள்ள கீறல்களை ஆய்வு செய்த பிரபல தடயவியல் நிபுணர் ஒருவர் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார். இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறிய அவர், முகத்தில் உள்ள காயங்களை வைத்து பார்த்தால் இது கொலையாக இருக்கலாம் என்று தெரிகிறது. வேறு யாராவது ஒருவர் நம்மை தாக்க வரும் போது தான், அதை தடுக்க முற்படும் போது தான் இதுபோன்ற காயங்கள் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags :