Advertisement

குமரியில் நான்கு போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Sat, 19 Dec 2020 2:42:54 PM

குமரியில் நான்கு போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. ஏற்கனவே கொரோனாவிற்கு 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதிக்கப்பட்டு மீண்டும் பணிக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் போலீஸ் ஒருவருக்கு கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்தது.

அவருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவர், சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டுள்ளார். இவருடன் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு போலீசாருக்கும் காய்ச்சல் அறிகுறி இருந்தது.

அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் நான்கு போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து நகராட்சி அதிகாரிகள் போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளித்ததுடன் பிளீச்சிங் பவுடரும் தூவினார்கள்.

police,corona,treatment,disinfectant,fear ,போலீஸ்,கொரோனா,சிகிச்சை,கிருமி நாசினி,அச்சம்

மேலும், போலீஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் மற்ற போலீசாருக்கும் கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் கொரோனா சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

கேரளாவில் ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வருபவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறார்கள். மாவட்ட எல்லை பகுதியில் போலீசாருக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து குமரி மாவட்டத்திலும் இரண்டாவது கொரோனா அலை ஏற்பட்டுள்ளதோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Tags :
|
|