Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்

பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்

By: vaithegi Sat, 10 Sept 2022 3:10:58 PM

பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று  முதல் தொடக்கம்

சென்னை: பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த 1.5 லட்சம் மாணவர்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வை நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்பாடுகளை செய்துள்ளது. எனவே அதன் படி சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20 முதல் 24 ஆம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து அதன் பின் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது

engineering studies,discussion ,பொறியியல் படிப்பு,கலந்தாய்வு

இந்த நிலையில் கடந்த வாரம் நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று (செப். 10) முதல் தொடங்குகிறது. இந்த கலந்தாய்வில் 1.57 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

மேலும் பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுவது.

Tags :