Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது; கமல் பதிலடி

முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது; கமல் பதிலடி

By: Nagaraj Thu, 17 Dec 2020 9:19:56 PM

முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது; கமல் பதிலடி

மகிழ்ச்சியளிக்கிறது... முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றியும், கமல்ஹாசனை பற்றியும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், மகிழ்ச்சி என்று கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். அதிமுகவை கடுமையாக கமல் விமர்சித்து வரும் நிலையில், இன்று அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கமலுக்கு பதிலடி கொடுத்தார்.

chief,big boss,happiness,kamal,review ,முதல்வர், பிக்பாஸ், மகிழ்ச்சி, கமல், விமர்சனம்

பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துகிறவர் அரசியலுக்கு வந்தால் சரியாக இருக்குமா? என்று கேட்ட முதல்வர், நாட்டுக்கு நல்லது செய்ய கமல் வரவில்லை. நல்லா இருக்குற குடும்பங்களை கெடுத்து வைக்கத்தான் வருகிறார் கமல். பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கெட்டுத்தான் போவார்கள். அந்த செயலைத்தான் செய்து கொண்டிருக்கிறார் கமல் என்று கடுமையாக விமர்சித்தார்.

இதையடுத்து, கமல்ஹாசன், முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

Tags :
|
|