Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2500 யூ டியூப் சேனல்களை அதிரடியாக முடக்கியுள்ளது கூகுள் நிறுவனம்

2500 யூ டியூப் சேனல்களை அதிரடியாக முடக்கியுள்ளது கூகுள் நிறுவனம்

By: Nagaraj Fri, 07 Aug 2020 11:01:20 AM

2500 யூ டியூப் சேனல்களை அதிரடியாக முடக்கியுள்ளது கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம் அதிரடி... தவறான தகவல்களைப் பரப்பி போலி பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகக் கூறி, சீனாவுடன் தொடர்புடைய 2500 - க்கும் மேற்பட்ட யூ டியூப் சேனல்களை முடக்கியுள்ளது கூகுள் நிறுவனம்.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கிவரும் கூகுள் நிறுவனத்தின் ‘வீடியோ ஷேரிங் பிளாட்பார்ம்’ தான் யூ - டியூப். இந்தத் தளத்தில், சீனாவுக்கு ஆதரவாக பொய்யான தகவல்கள் அடங்கிய வீடியோக்கள் பரப்பப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்தது கூகுள் நிர்வாகம்.

இந்த விசாரணையில், கடந்த ஏப்ரல் - ஜூன் மாதங்களுக்கு இடையில் சீனாவுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 2500 யூ -டியூப் சேனல்கள் நீக்கப்பட்டிருப்பதாகக் கூகுள் தெரிவித்துள்ளது. இந்த யூ - டியூப் சேனல்கள் பொய்யான தகவல்களை அரசியல் சார்ந்து பரப்பியதாகக் கூறியுள்ளது கூகுள்.

videos,channels,deleted,experts,comment ,வீடியோக்கள், சேனல்கள், நீக்கப்பட்டுள்ளன, வல்லுநர்கள், கருத்து

இதுகுறித்து கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீக்கப்பட்ட வீடியோ சேனல்கள் பெரும்பாலும் தேவையற்ற (ஸ்பேம்) கண்டண்ட்களை அதிகம் கொண்டிருந்தன. அந்தத் தலங்கள் அரசியல் தொடர்புடைய பொய்யான தகவல்களையும் பரப்பின” என்று கூறியுள்ளது. நீக்கப்பட்ட யூ-டியூப் சேனல்கள் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் இதுவரை எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஆனால், ஏற்கெனவே, சீனத் தலங்கள் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றன எனும் குற்றச்சாட்டை மட்டும் சீனா மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2016 - ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றபோது ரஷ்யாவுடன் தொடர்பிலிருந்த வெளிநாட்டு நடிகர்கள், நடிகர்கள் சமூக வலைத்தளத்தில் பல வீடியோக்களை வெளியிட்டனர். இந்த வீடியோக்கள் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே வெளியிடப்பட்டன என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

அதனால் இதே போன்றதொரு தவறு மீண்டும் ஏற்படாமல் இருக்க கூகுள், பேஸ்புக் ஆகியவை ஆன்லைன் பிரச்சாரத்தை எதிர்கொள்வது தொடர்பாக தமது கொள்கைகளை அவ்வப்போது வெளியிட்டு, மேம்படுத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே சீனா தொடர்புடைய வீடியோக்களும், சேனல்களும் நீக்கப்பட்டுள்ளன என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags :
|