Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் அரசு ஊதியம் அளிக்க திட்டம்- கமல்ஹாசன்

இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் அரசு ஊதியம் அளிக்க திட்டம்- கமல்ஹாசன்

By: Monisha Mon, 21 Dec 2020 2:20:56 PM

இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் அரசு ஊதியம் அளிக்க திட்டம்- கமல்ஹாசன்

‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட பிரச்சாரத்தை கடந்த 13-ம் தேதி மதுரையில் தொடங்கினார். 14, 15, 16 ஆகிய தேதிகளில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் முதல்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

இந்தநிலையில் கமல்ஹாசன் இன்று தனது 2-வது கட்ட பிரச்சாரத்தை காஞ்சீபுரத்தில் தொடங்கினார். இதற்காக அவர் நேற்று மாலை 4.00 மணிக்கு ஆலந்தூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார். போரூர், பூந்தமல்லி வழியாக காஞ்சீபுரம் சென்றார். நேற்று மாலை காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தில் பேசினார். இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் கட்டமைப்பு மாநில செயலாளர் எஸ்.கே.பி.பி. கோபிநாத், நிர்வாகிகள் பிரபாகரன், மயில்வாகனன், பிரதீப்குமார், ஏசு, சண்முகம், தொல்காப்பியன் ஆகியோர் பங்கேற்றனர்.

election,campaign,tour,interview,salary ,தேர்தல்,பிரச்சாரம்,சுற்றுப்பயணம்,பேட்டி,ஊதியம்

இந்தநிலையில் கமல்ஹாசன் இன்று காலை காஞ்சீபுரத்தில் 2-வது கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார். காலையில் அண்ணா நினைவு இல்லத்திற்கு சென்ற அவர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அண்ணா பிறந்த காஞ்சீபுரத்தில் ஏழு அம்ச திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். தமிழகத்தில் ஊழல் இல்லாத அரசு அமைய வேண்டும். அரசு திட்டங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் மக்களை சென்றடைய வேண்டும்.

தொழிற்புரட்சி ஏற்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் அரசு ஊதியம் அளிக்கும் திட்டத்தையும் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். பசுமை புரட்சியையும் செய்வேன்.

ஒருவனை வறுமை கோட்டுக்கு மேலே தூக்கி வைத்துவிட்டால் அரசு வென்றுவிட்டது என்று பொருள் அல்ல. வாழ்க்கையில் பல சறுக்கல்கள் வரலாம். அப்படி வறுமை கோட்டுக்கு மேலே இருப்பவர்கள் சறுக்கும் போது வறுமை கோட்டுக்கு கீழே தான் போவார்கள். செழுமை கோட்டுக்கு மேலே அவனை தூக்கி வைத்தால் சறுக்கல் நேர்ந்தாலும் வியாபாரத்தில் தோல்வி, எது நேர்ந்தாலும் அவன் வறுமை கோட்டுக்கு மேலேயே நிற்பான். இது பெரிய அல்ஜீப்ரா கணிதம் அல்ல. அப்படியே அண்ணார்ந்து பார்த்தால் உயரமான வி‌ஷயங்கள் தெரியும் என அவர் கூறினார்.

Tags :
|