Advertisement

2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் .. அரசு இன்று அனுமதி

By: vaithegi Tue, 24 Jan 2023 8:42:36 PM

2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் ..  அரசு இன்று அனுமதி

சென்னை: தமிழகத்தின் சென்னை மாநகரில் சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து முதல் கட்டமாக விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை – சென்னை சென்ட்ரல் வரையிலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த மெட்ரோ ரயில் மூலம் ஏராளமான மக்கள் தற்போது பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து உரிய அனுமதி பெற்று 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தற்போது சென்னையில் நடைபெற்று கொண்டு வருகிறது.

govt,metro rail,transport ,அரசு ,மெட்ரோ ரயில் ,போக்குவரத்து

இதையடுத்து ரூ.63,246 கோடி செலவில் 3 வழித்தடங்களில் இந்த பணிகள் நடைபெற்று வருவது .2025-ம் ஆண்டுக்குள் இப்பணிகளை முடிக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் மெட்ரோ ரயில் திட்டத்தை சென்னை விமான நிலையம் முதல் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் வரை நீட்டிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து மெட்ரோ ரயில் பணிகள் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|