- வீடு›
- செய்திகள்›
- 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் வருகிற 27-ல் வெளியீடு
10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் வருகிற 27-ல் வெளியீடு
By: vaithegi Wed, 22 Mar 2023 1:50:23 PM
சென்னை: 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு .. மார்ச் 27-ல் ஹால்டிக்கெட் வெளியீடு .... தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:
10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கான ஹால்டிக்கெட், மார்ச் 27-ல் வெளியிடப்பட உள்ளது.
இதையடுத்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும் பொதுத்தேர்வுக்கான பெயர்ப் பட்டியலில் மாணவர் பெயர் உட்பட விவரங்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளரை அணுகி திருத்தம் செய்துகொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Tags :