- வீடு›
- செய்திகள்›
- பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு இன்று ஹால் டிக்கெட் வெளியீடு
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு இன்று ஹால் டிக்கெட் வெளியீடு
By: vaithegi Wed, 04 Jan 2023 10:53:10 AM
சென்னை: 2022- 23 கல்வியாண்டிற்கான பொது தேர்வு அட்டவணை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடபட்டது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறும் எனவும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெறும்.
இதனை தூது 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் நடப்பாண்டு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்.
இந்த பொது தேர்வுக்கான செய்முறை தேர்வு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இச்சூழலில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது.
தேர்வு துறை இணையதளத்தில் இருந்து அனைத்து பள்ளிகளும் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2 மணி முதல் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை கூறியுள்ளது