- வீடு›
- செய்திகள்›
- பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளதா?
பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளதா?
By: vaithegi Mon, 07 Aug 2023 3:33:40 PM
இந்தியா: இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மாற்ற வாய்ப்பில்லை என தகவல் ... இந்தியாவில் தற்போது பணவீக்கம் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியானது இனி வர இருக்கும் நிதி கொள்கை மதிப்பாய்வில் தற்போது வழங்கி வரும் வட்டி விகிதத்தை நிலையாக வைக்க திட்டமிட்டு வருகிறது.
இதனை அடுத்து பொருளாதார வளர்ச்சியின் வேகத்தைத் தக்கவைக்கும் முயற்சியில், ரிசர்வ் வங்கி கடன் செலவுகளை நிலையானதாக வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையில் 6 உறுப்பினர்களை கொண்ட நிதி கொள்கை தீர்ப்பை வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட இருக்கிறார். கடந்தாண்டு மே மாதம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த செயல்முறையை மேற்கொண்டது.
ஆனாலும் வட்டி விகிதம் மாறாமல் 6.5 சதவீதமாக நிலையாக இருக்கிறது.மேலும் அது மட்டுமில்லாமல் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் நடத்தப்பட்ட இருமாத கொள்கை மதிப்பீடுகளின் போது, முதன்மை கடன் விகிதத்தில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பதால் இனியும் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.