Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வியட்நாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட இயற்கைபேரிடர்களில் சிக்கி 111 பேர் உயிரிழப்பு

வியட்நாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட இயற்கைபேரிடர்களில் சிக்கி 111 பேர் உயிரிழப்பு

By: Karunakaran Thu, 22 Oct 2020 1:07:56 PM

வியட்நாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட இயற்கைபேரிடர்களில் சிக்கி 111 பேர் உயிரிழப்பு

வியட்நாம் நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். குறிப்பாக, அந்நாட்டின் குவாங்க் பின்ஹ் மாகாணம் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாகாணங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளநீர் வீடுகள், சாலைகளை சூழ்ந்துள்ளது. சாலைகள், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை வெள்ளம் காரணமாக 1 லட்சத்து 78 ஆயிரம் வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

heavy rains,vietnam,111 dead,natural disasters ,பலத்த மழை, வியட்நாம், 111 பேர் இறப்பு, இயற்கை பேரழிவுகள்

மேலும் இந்த கனமழையால், 7 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நாசமடைந்துள்ளன. 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது, வியட்நாமில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களில் சிக்கி இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிலச்சரிவு போன்ற பேரிடர் காரணமாக இதுவரை 27 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர். மேலும், மாயமானவர்களை தேடும்பணி தீவிரமடைந்து வருகிறது. இருப்பினும் இந்நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.


Tags :