- வீடு›
- செய்திகள்›
- உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி இழுபறி; ஆசிரியர்களுக்கு அதிபர் ரணில் எச்சரிக்கை
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி இழுபறி; ஆசிரியர்களுக்கு அதிபர் ரணில் எச்சரிக்கை
By: Nagaraj Thu, 20 Apr 2023 11:35:39 PM
கொழும்பு: ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை... பிள்ளைகளின் கல்வியைப் பணயமாக்க ஆசிரியர்களுக்கு இடமளிக்கப் போவதில்லை அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி இழுபறி நிலையில், இருக்கும் நிலையில், அதிபர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை அடுத்த வாரத்திற்குள் ஆரம்பிக்கத் தவறினால் அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி கல்வியை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதாகவும் பொறுப்புகளை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சின் அதிகாரிகளிடமும் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
Tags :