வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைப்பு இன்று முதல் அமல்
By: vaithegi Wed, 30 Aug 2023 10:08:19 AM
சென்னை: வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு .... உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்க முடிவு செய்து உள்ளது.
எனவே அதன்படி, கூடுதலாக மானியம் வழங்கப்படுவதன் மூலம் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டர் விலை ரூ.400 வரை குறையும்.
மேலும் ஒட்டுமொத்தமாக கேஸ் சிலிண்டரின் விலையை குறைப்பதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.7,500 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 200 குறைந்து உள்ளது. இதையடுத்து இன்று முதல் அமலுக்கு வந்தது. சமையல் கேஸ் சிலிண்டரின் விலையில் ரூபாய் 200 குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் விலை குறைப்பு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி சென்னையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 200 குறைந்து ₹918.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.